05 December, 2011

அடிமைக்கு விடுதலை நாடாக்கு!
காசி ஆனந்தனின் திரைப்பாடல்

இலங்கை, மட்டக்களப்பிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள தன்னுடைய அழகான கிராமத்தில் ஒரு சிட்டுக்குருவியைப் போல் சுதந்திரமாக பறந்து திரிந்த 13 வய்து சிறுமி Y.புனிதவதி. அக்குழந்தை போரின் பெயரால் எப்படி சீரழிக்கப்பட்டாள் என்பதை விவரிக்கிறது “உச்சிதனை முகர்ந்தால்”.


புனிதவதி எந்த தேவதையாலும் ஆசிர்வதிக்கபடவில்லை. அவள் எல்லா சாத்தான்களாலும் சபிக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கு நேர்ந்தது உலகில் எந்த குழந்தைக்கும் நேரக் கூடாது. 2009 மார்ச் 1-ம் தேதி புனிதவதி என்கிற அந்த புனித நதியின் வாழ்க்கை திசை திருப்பப்படுகிறது.


அதே ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி வரை அந்தகுழந்தைக்கு நேரும் சோதனைகளை வார்த்தைகளால் எடுத்து சொல்லிவிட முடியாது. எனினும் தனக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமலேயே மகிழ்ச்சியை சுமந்து வலம் வரும் அந்த குட்டி தேவதையை நேசிக்கிற மனிதர்கள், அவள் வாழ்க்கை பயணம் முழுவதும் அவளை தொடர்ந்து வருகிறார்கள். அந்த மனிதநேயம் தன் இறைவன் இருப்பை உறுதி செய்கிறது. ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் - அந்த புனித நதியின் பயணம் தான் உச்சிதனை முகர்ந்தால் என்று உணர்ச்சி பொங்க நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இப்படத்தின் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்.

புனிதவதியாக சிறுமி நீநிகா, சத்யராஜ், நாசர், சீமான், சங்கீதா ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

எக்காரணம் கொண்டும் நான் சினிமாவில் பாட்டெழுத மாட்டேன் என்று உறுதியோடு இருந்த உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இப்படத்தில் பாடல்கள் எழுதி உள்ளார்.

அரசியல் விமர்சகராகவும் சினிமாவின் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தும் தமிழருவி மணியன் இப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.

மைனா படத்தின் மூலம் இசையில் தனக்கான முத்திரையை பதித்த டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

---------------------------------------------------------

படம் - உச்சிதனை முகர்ந்தால்
பாடலாசிரியர் - காசி ஆனந்தன்

இருப்பாய் தமிழா நெருப்பா... நீ!
இழிவாய் கிடக்க செருப்பா... நீ!

ஓங்கி ஓங்கி புயல் அடிக்கிறதே
ஒரு தீபம் அணையும் முன்னே துடிக்கிறதே...
துடித்து துடித்து உடல் சிதைகிறதே...
தினம் பிணங்கள் பிணங்களாய் புதைகிறதே...
எம் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள் - (படத்தில் நீக்கப்பட்ட வரி)
அவள் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்! - (படத்தில் நீக்கப்பட்ட வரி)

எரிமலை தனியுமா... தண்ணீரில்!
கடல் அலை கரையுமா... கண்ணீரில்!
முழங்கிடும் சங்கே முழங்காயோ
விலங்குகள் உடைக்க பிறந்தாயோ
அடிமையாய் வாழும் நிலம் ஒன்று
விடியலைக் காணும் களம் இன்று
வெட்டவெளியோ வீடானது...
பட்டினியோ உணவானது...
போராடு நீ வீரோடு!

மின்னலின் தொடர்ச்சியே... இடியாகும்!
இன்னலின் தொடர்ச்சியே... விடிவாகும்!
கொந்தளித்து அறம் வெடிக்காதோ
கொடியவர் மூச்சை முடிக்காதோ
ஆயிரம் அலைகளை தோளாக்கு
அடிமைக்கு விடுதலை நாடாக்கு (படத்தில் நீக்கப்பட்ட வரி)
மாந்தர் உயிரோ நிலையற்றது...
மானம்தானடா நிகரற்றது...
போராடு நீ வீரோடு!

21 September, 2011

புத்தர் சிரித்தார்…..மாற்றான் தோட்டத்து மலர் (பாமரன்) , நீங்களும் படியுங்களே



ஏறக்குறைய இருபதாண்டுகளுக்குப் பிறகு மற்றொரு புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது கூடங்குள மக்களது வாழ்க்கையில். 90 களில் இம்மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்த அநேகம் பேர் ஓசையின்றி காணாமல் போனார்கள். (அதில் நானும் ஒருவன்).
தமிழ்ச் சமூகத்திற்குத்தான் எண்ணற்ற பிரச்னைகள் இருக்கின்றனவே…. சமூக நீதி, சாதீயம், ஈழம் என…… அதில் ஏதோ ஒன்றில் ஒன்றிப்போயிருக்கலாம் நம்மவர்கள். அவற்றைப் போலவே இன்னமும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது கூடன்குள மக்களது அவலமும்.
தலித் மக்கள் மீதான பரமக்குடி படுகொலைகள் எப்படி இன்னமும் பலரது கேளாச் செவிகளை எட்டவில்லையோ…. அப்படி கூடங்குள மக்களது கூக்குரலும் தமிழகத்தின் பிற பகுதி மக்களது மனதை உலுக்கவில்லை.
1986-1987 வாக்கில் ”வேண்டாம் மரணதண்டனை” என தமிழகம் முழுக்க கருத்தரங்கம்…. கையெழுத்து இயக்கம்….. பள்ளி, கல்லூரிகளின் வகுப்பறைகளில் நுழைந்து பரப்புரைகள்….. என நமது தோழர்கள் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்(சர்வதேச பொது மன்னிப்பு இயக்கம்) வாயிலாக செயல்பட்டபோது ஏறிட்டும் பார்க்கவில்லை எண்ணற்றோர். 90 களின் பிற்பகுதியில் நம்மவர்களுக்கே அத்தண்டனை என்றபோது எழுந்த எழுச்சியில் எம் கரங்களையும் அதனோடு இணைத்துக் கொண்டோம்.
“புத்தர் சிரித்தார்” நூலினை 1990 ஆம் ஆண்டு வெளியிட்டபோது அதைக் கண்டுகொண்ட பத்திரிக்கைகள் இரண்டே இரண்டுதான். ஒன்று : கோவை ஞானியின் “நிகழ்”. மற்றொன்று : ”கணையாழி”.
திருட்டு வி.சி.டி.கூட ப்ளாப் ஆகிப் போன தமிழ் சினிமாவைப் போல எவராலும் கண்டு கொள்ளப்படாத அந்த “புத்தர் சிரித்தார்” இனி ஒவ்வொரு திங்களும், வியாழனும் இணையத்தில் உங்களை வலம் வரும்.
(அதுக்கு நாங்களாடா கெடச்சோம்? எனப் புலம்பிப் பயனில்லை. நாயோட படுத்தா உண்ணியோடதான எந்திரிக்கணும்?
”எல்லாம் வல்ல” நம் அணு விஞ்ஞானிகள் உம்மை காப்பாற்றக் கடவார்களாக!.)
இனி…..


வசர அவசரமாக வந்தார் அந்த நண்பர்.
வந்த வேகம் அவரது மூச்சிறைப்பில் தெரிந்தது.
”உங்களுக்குத் தெரியுமா? வி.பி.சிந்தன் இறந்து விட்டாராம். பேப்பரில் போட்டிருக்கு” என்றார்.
அப்படியா? எப்படி? என்றேன்.
சொன்னார். அத்தோடு நில்லாமல்
”பாத்தீங்களா எவ்வளவு நல்ல சாவுன்னு?”
புரியாமல் நிமிர்ந்து பார்த்தேன். சொன்னார்.
“இங்கிருந்து போய் மாஸ்கோவுல செத்திருக்கார். நினைக்கவே சிலிர்க்கிறது” என்றார்.
மாஸ்கோவில் சாவதற்கும் சிலிர்ப்பதற்கும் சம்பந்தம் என்ன இருக்கிறது என்றேன்.
கேட்டதுதான் தாமதம்.
“புரியாம பேசாதீங்க தோழர். ஒவ்வொரு தோழரும் சாவைக் கண்டு அஞ்சல. ஆனா அப்படிப்போற உயிர் சோவியத் யூனியன் மடியில போற மாதிரி இருந்தா எவ்வளவு சந்தோஷத்தோட போகும்….. இது புரியாம….”
உண்மையில் எனக்குப் புரியவில்லைதான்.
ஆனால் இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருந்தது எப்படியோ சோவியத் யூனியனுக்கே எட்டியிருக்கும் போலிருக்கிறது.
உண்மையிலேயே உலகெங்கும் உள்ள மக்களின்
உள்ளத் துடிப்பினை சோவியத் யூனியன்
உணர்ந்திருந்ததனை உணரவில்லை நான்.
இப்படி ஒவ்வொருவரும் சோவியத் யூனியனுக்கே வந்து “சொர்க்க லோகம்” போக வேண்டும் என ஆசைப்பட்டால் சோவியத் யூனியனே சுடுகாடாகிவிடுமே எனும் அச்சத்தில் ஆலோசனைகள் நடத்தி அறிஞர்களுடன் அளவளாவி அரிய வழியினைக் கண்டு பிடித்தனர் அணுகுண்டு அறிஞர்கள்.
அதுதான் :
உலகெங்கும் உள்ள மக்களின்
உன்னத வேண்டுகோளுக்கு இணங்கும்
அதே நேரத்தில் அவர்கள்
சோவியத் யூனியனுக்கு வந்து சிரமப்பட்டுச் சாவதைவிட
மிக எளிய முறையில் அங்கே
பழைய இரும்புக் கடைகளில் போட வேண்டிய
அணு உலைகளை எல்லாம் ஆங்காங்கே
உள்ள நாடுகளுக்கு அனுப்பி வைத்தால்
“சமத்துவமான சாவு” அனைத்து மக்களுக்கும்
பரவலாகப் போய்ச் சேரும் என முடிவு செய்ததன்
விளைவே :
“கூடங்குளத்திலும் அணு உலைகள்.”

வெவரங்கெட்ட விஞ்ஞானிகளுக்கு…..!,மாற்றான் தோட்டத்து மலர் (பாமரன்)





இப்பிடிக் கூப்பிடறனேன்னு கோவிச்சுக்காதீங்க. ஏதோ உங்கள மாதிரி நாலெழுத்துப் படிக்கிலீன்னாலும் அங்கியும் இங்கியும் காதுல உளுந்தத வெச்சுத்தான் இந்தக் கடுதாசிய எழுதறேன். எனக்கு அவ்வளவாப் படிப்பறிவு கெடையாதுங்க.

அந்தக் காலத்துல எங்க அப்பத்தா நெலாவைக் காட்டித்தான் சோறு ஊட்டும். அப்பறம் நெலாவைப் பாம்பு முழுங்கறது… பாம்பைப் போட்டு கடலைக் கடையறது… அப்பிடி இப்பிடின்னு கதையெல்லாம் சொல்லும். கொஞ்சம் பெரிசாக பெரிசாக நம்மூர்ல பெரியார் வேற மூலமூலைக்கு நின்னுகிட்டு “அடப் பைத்தியக்காரா! நெலாவென்ன லட்டா? ஜிலேபியா? பாம்பு வந்து முழுங்கறதுக்கு? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கடா முட்டாப்பசங்களா…”ன்னு கன்னா பின்னான்னு திட்டீட்டு இருந்தது புரிய ஆரம்பிச்சுது.
பத்தாததுக்கு திடீர்ன்னு ஒரு நாள் உங்கள மாதிரி நாலு பெரிய மனுசனுங்க சேந்து நெலாவுலயே போய் குதிச்ச சேதி கேட்டதுமே சின்ன வயசுல கேட்ட சமாச்சாரங்க மேலெயெல்லாம் சந்தேகம் பொறந்துடுச்சு.
அப்புறம் ஒருநாளு நம்ம ஊட்டுல மாட்டீருந்த சங்கிலிக்கருப்பராயன்ல இருந்து சரசுவதி வரைக்கும் அத்தனையையும் கழுட்டி பொடக்காழில போய் போட்டுட்டு வந்தேன்.

என்ன இருந்தாலும் நீங்க என்னோட கண்ணத் தொறந்தவுங்க. நம்ம சனங்களோட முட்டாத்தனத்துக்கெல்லாம் ராப்பகலா ஆராஞ்சு பதிலு கண்டுபுடிச்சவுங்க….

இருந்தாலும் பாருங்க….
இது இந்த சனங்களுக்குப் புரியவே மாட்டேங்குது….

என்னவோ நீங்களும் கூட ராக்கெட் உடறப்ப புள்ளையாருக்குத் தேங்கா ஒடச்சுட்டுத்தான் மேல உடறீங்களாமா? உங்கள மாதிரி விஞ்ஞானிங்க கூட திருப்பதில மொட்டை அடிச்சுக்கிட்டு லட்டுக்காக சண்டப் போட்டுக்கறீங்கன்னு கேள்விப்பட்டேன். அதக் கேட்டதும்தான் கோபம் பத்தீட்டு வந்துருச்சு. சங்கிலிக்கருப்பராயன பொடக்காழில போட்டதுக்கு பதிலா உங்களத் தூக்கிப் போட்டிருக்கலாமோன்னு தோணிச்சு. ஆனாலும் நம்மூர் பசங்கள நம்ப முடியாது. ஏதாவது புளுகுனாலும் புளுகுவானுகன்னு தெரிஞ்சுதான் இந்தக் கடுதாசிய எழுதறேன்.

அதென்னவோ கூடங்குளத்துல அணு உலையக் கொண்டுவரப் போகுது நம்ம கவர்மெண்டு… அது வந்தா ஊரே காலியாயிடும்…. புல் பூண்டு கூட மொளைக்காது….ன்னு மொளச்சு மூணு எலை கூட உடாத பசங்கெல்லாம் பேசீட்டுத் திரியுதுங்க. ஏங்க அணு ஒலை நம்ம விஞ்ஞானத்துக்கு எவ்வளவு பெரிய்ய்ய்ய்ய கெவுர்த்தி. இதப் புரிஞ்சுக்காம ஆபத்து கீபத்துன்னு அளந்துகிட்டு இருக்கானுங்க சிலபேரு. ஆனா அவனுக சொல்றதுலயும் ஒண்ணு ரெண்டு நல்லது இருக்கத்தான் செய்யுதோன்னு ஒரு சந்தேகங்க….
அமெரிக்காவுல என்னமோ இந்த ஒலைகளை வருசத்துக்கு கொறஞ்சது அறநூறு தடவையாவது மூடறானுங்களாமா? ஏங்க மூடறதுக்காகவா தொறக்கிறது? ஒரு எழவும் புரிய மாட்டேங்குதுங்க. ஏதோ உங்கள மாதிரி வெவரம் தெரிஞ்ச நாலுபேரு வெளக்கிச் சொன்னாத்தானே எங்குளுக்குப் புரியும்.

“அது” வந்தா இந்த நாட்டுக்கே வெளக்குப் போடலாம்… பேக்டரி ஓட்டலாம்….ன்னு சொல்ற ஆளுங்களும் இருக்காங்க. அப்புறம் என்னங்க இந்த நாட்டுக்கே வெளக்கு வருதுன்னா ஒரு ஊரு செத்தாத்தான் என்ன? அதுவும் பொதைக்கற வேல மிச்சம்னு சொல்றாங்க. அப்படியே சாம்பலாயிருமாமா? தூக்கற வேலயும் இல்ல… பொதைக்கற வேலயும் இல்ல.
ஒரு நாட்டுக்கு கரண்டு கெடைக்குதுன்னா ஒரு ஊரையே கொளுத்தலாம்…. இந்த ஒலகத்துக்கே கரண்டு கெடைக்குதுன்னா ஒரு நாட்டையே கொளுத்தலாம். எத்தன பேரு பஸ்சுலயும் ரயில்லயும் அடிபட்டுச் சாகறானுங்க… இதுல செத்தா எவ்வளவு கவுரவம். விஞ்ஞானத்துக்காக செத்தவன்னு பேராவது மிஞ்சுமில்லீங்களா?

இருந்தாலும் பாருங்க….
இது இந்த சனங்களுக்குப் புரியவே மாட்டேங்குது….

அதென்னவோ அப்பிடிக் கிப்பிடி இந்த ஒலை வெடிக்கறமாதிரி தெரிஞ்சா ராவோட ராவா ஊர்சனத்த வேற தூரத்து ஊருக்கு கொண்டுபோற அளவுக்கு நெறைய பாதுகாப்பு சமாச்சாரமெல்லாம் செஞ்சிருக்கோம்; அதனால யாரும் பயப்பட வேண்டாம்னு கவர்மெண்டு சொல்றதா கேள்விப்பட்டேங்க. இதுலதாங்க ஒரு சின்ன சந்தேகம்….. என்னடா இது இவனே இப்பிடிக் கேக்கறானேன்னு கோவுச்சுக்கக் கூடாது.
ஏங்க நம்மூர் மூலைல தீப்புடிச்சாலே இந்த பயருசர்வீசு வர்றதுக்கு ஏழு மணி நேரமாவுது….. வந்தாலும் தண்ணி வந்தா பைப்பு கழுண்டுரும்…. பைப்பு செரியா இருந்தா தண்ணி வராது…. எல்லாஞ் சேந்து வர்றதுக்குள்ள தீ தானா அணஞ்சுரும். அப்புறம் எப்பிடீங்க இந்த ஒலைல ஏதாவுதுன்னா நாங்க உங்கள நம்பீட்டு உக்காந்திருக்கிறது? ஏதோ கேக்கோணும்னு தோணுச்சு கேட்டுட்டேன்…. சரி அத உடுங்க….


உலைல கெடக்கற கசடாமா….? அது பேரு புளூட்டோனியமோ என்னமோ…. அதுல இருந்து ஏதோ சக்தி வெளியே வந்துட்டே இருக்கும்னு சொல்றாங்க. அந்தக் காத்து நம்ம மேல பட்டாலேயே கண்ட கண்ட நோவெல்லாம் வரும்னு சொல்றாங்களே…. இது நெசந்தாங்களா?
ஆனா அதுக்கும் வழி இருக்கிறதா நம்மூர்ல பேசிக்கிறாங்க. அந்தக் கசட பத்திரமா எடுத்துட்டுப்போயி பொதைச்சிருவாங்க…. இல்லேன்னா நம்ம நாயர் கடை பார்சல் மாதிரிப் பண்ணி கடலுக்குள்ள கடாசிருவாங்கன்னு கேள்விப்பட்டேன்.

உங்குளுக்குத்தான் எவ்வளவு நல்ல மனசு….
நீங்குளுந்தான் இந்த சனங்க உசுரக் காப்பாத்தறதுக்காக தலைல இருக்குற மசிரெல்லாம் போயி பாடாப்படறீங்க….

இருந்தாலும் பாருங்க….
இது இந்த சனங்களுக்குப் புரியவே மாட்டேங்குது….

கசடைத் தூக்கி கடலுக்குள்ள போட்டா என்னைக்காவுது அதுல ஓட்டை விழுந்துச்சுன்னா மீனெல்லாம் சாகும்…. அதத் தின்னா நம்ம சனமெல்லாம் சாகும்னு சொல்றானுகங்க. ஏங்க…. இவனுக மீன் புடிக்க வேற எடமே கெடைக்காதா….? கடல்தான் கெடைச்சுதா….? ஏன் நம்மூர் வாலாங்கொளம் மாதிரி வேற ஏதாவது கொளத்துல மீன் புடிச்சா போதாதா….? அப்பிடி அதுலயும் தீந்து போச்சுன்னா நம்ம கெவர்மெண்டே ஊருக்கு ஏழு கொளம் வெட்டி அதுக்குள்ள மீனைக்கொட்டி நம்ம “பஞ்சாயத்து ராசு” மாதிரி “மீன் ராசு”ன்னு ஒரு திட்டம் கொண்டாந்தா எல்லாம் செரியாயிடுங்க…. இது புரியாம இவனுங்க…..
என்னமோ…. எந்த உலையா இருந்தாலும் முப்பதே வருசந்தான் ஆயுசு…. அதுக்கு அப்பறம் அதை சமாதி மாதிரி காங்கிரீட்டு போட்டு மூடி காவல் வேற வெக்கணும்…. அதக் கட்டறத விட மூடறதுக்கு பல மடங்கு செலவாகும்…. அப்பிடீன்னெல்லாம் சொல்றாங்க…. அதிலிருந்து வர்ற கதிரியக்கக் காத்தாமா….. அதுவேற பத்தாயிரம் வருசம் வரைக்கும் அடிக்கும்னு வேற சொல்றாங்க…. அப்ப ஒண்ணு பண்ணுங்க….. “நம்ம” தலைவருக்கு ஓட்டுப் போடாத ஊராப் பாத்து உலையை ஆரம்பிச்சிருங்க….
அது ஓடவும் வேண்டாம்….
அத மூடவும் வேண்டாம்….
ஒரேடியா அந்த ஊரையே மூடீறலாம். இப்பிடியே ஒவ்வொரு ஊரா மெரட்டுனா போதுங்க…. அப்புறம் ஊரென்ன…… நாடே நம்ம கைல….. ஏன்…. இந்த உலகமே நம்ம கைல… எப்புடி நம்ம “ஐடியா”?
இந்தக் கடுதாசிய எழுதி முடிக்கறப்ப இன்னொரு சமாச்சாரம் கைக்குக் கெடைச்சதுங்க. அதுவும் நீங்களே எழுதி வெளியிட்டதுங்க. ஆனா…. அது கெடைச்சப்பறந்தாங்க கொளப்பமே அதிகமாயிடுச்சு…..
தப்பித்தவறி உலைல இருந்து கதிரியக்கம் கெளம்பீடுச்சுன்னா….. ஜீப்புல மைக்கக் கட்டீட்டு ஊர் ஊராப் போயி தெரியப்படுத்துவோம்னு போட்டிருக்கீங்க…..
ஏங்க….. கதிரியக்கம் கெளம்பீருச்சுன்னு தெரிஞ்சவுடனே எந்தப் பயலாவது ஜீப்பை ஊருக்குள்ள ஓட்டுவானுங்களா…..? இல்ல ஊரை உட்டே ஓடுவானுங்களா….?
சரி….. அது கெடக்கட்டும்…. அப்புடி என்னாவது சந்தேகம்னா அவுங்கவுங்க ஊட்டு ரேடியோப் பொட்டியையும், டீவீப் பொட்டியையும் தெறந்து கேளுங்கன்னு போட்டிருக்கீங்க…..
ஏங்க…. இந்த நாட்டுல என்னைக்காவுது டீவியும் ரேடியோவும் உண்மை பேசி கேட்டுருக்கீங்களா? பெரியவர் செயப்பிரகாசு நாராயணன் குண்டுக் கல்லாட்டம் உயிரோட இருந்தப்பவே நம்மூர் ரேடியோ அவரைக் கொன்னு போட்டுது. ஊர்ல ஏதாவது பிரச்சனை….. கடையடைப்புன்னா….. ரோட்டுல திரியற கழுதை….. மாடு…. இதையெல்லாம் பாத்துட்டு உங்க ஆளுங்க பஸ்சுகள் பறந்தன….. ரயில்கள் மிதந்தன…. ”மாமூல்” வாழ்க்கை கெடவில்லை….ன்னு கப்சா உடுவாங்க. இந்த லட்சணத்துல நீங்க டீவீயையும் ரேடியோவையும் கேக்கச் சொல்றீங்களே….. இது உங்குளுக்கே நாயமாப் படுதா…..? வேண்ணா ஒண்ணு பண்ணச் சொல்லுங்க….. டீவீலயும் ரேடியோவுலயும்….உலைகள் பத்திரமா இருக்கு. கதிரியக்கம் துளிக்கூட வெளியேறல….” அப்பிடீன்னு சொல்லச் சொல்லுங்க…. அப்பத்தான் சனங்க துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஊரைக் காலி பண்ணுவாங்க.
சரி…. இதுவும் கெடக்கட்டும்….. ஊட்டுல இருக்குற சன்னல்…. கதவையெல்லாம் இறுக்கமா மூடீட்டு உள்ள இருக்கச் சொல்றீங்க…..
சரிதான்…. ஆனா இங்க சனங்க ஊடே இல்லாம நாயும் பன்னியும் மாதிரி பசில பராரியா சுத்தீட்டு இருக்குறப்ப எப்புடீங்க ஊட்டுக்குள்ள பூந்து கதவச் சாத்தறது…..சன்னலை மூடறது? கண்டவன் ஊட்ல பூந்தா கதவச் சாத்த முடியும்? அப்பிடியே ஊடே இருந்தாலும் ஓடே இல்லாம….. மழை வந்தா தலைக்கிட்டயும் கால்கிட்டயும் கக்கத்துலயும் ஓட்டைச் சட்டிகளை வெச்சுட்டுக் கெடக்குற எங்கள மாதிரி சனங்க எதப்போயி அடைக்கிறது? எதப்போயி மூடறது? அப்படீன்னா…. ரோட்டோரமாப் படுக்குறவனும்….. பாட்டுப்பாடிப் பொழைக்கிறவனும்….. கழைக்கூத்தாடியும்……. எங்க போயி ஒடுங்குவாங்க…..? யார் ஊட்ல பதுங்குவாங்க…..?
இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் நம்ம நாட்டுக்கு அவமானமா இருக்குதுன்னு ஒருவேளை இந்தத் திட்டமோ என்னவோ…. ஆனா இதுக்குப் பதிலா ஊடில்லாம இருக்குற இதுகள ஓட்டீட்டுப் போறதை விட உலைக்குள்ளயே தூக்கிப் போட்டா…. ஏழ்மைய ஒழிச்ச மாதிரியும் இருக்கும்…. ஏழையவே ஒழிச்ச மாதிரியும் இருக்கும்.
இருந்தாலும் உங்குளுக்கு நல்ல மனசுங்க.
எது எப்பிடியோ ஊரைச் ”சுத்தம்” பண்றதுன்னு நீங்க தீர்மானிச்சாச்சுன்னா அதுக்கு “அப்பீலே” கெடையாதுங்க. அந்தக் காலத்துல பிளேக் நோவு வந்து ஊரையே தூக்கீட்டுப் போனாப்பல இந்தக் காலத்துல பிளேக்குக்கு அப்பனா அணு உலை வருது.
இந்த மடம் இல்லைன்னா வேற எந்த மடமாவது போக வேண்டியதுதான்….
அதுக்கும்….
உங்க விஞ்ஞானம்…..
உசுரோட உட்டு வெச்சா….

பாமரன்.

08 September, 2011

தோழி செங்கொடிக்கு! மாற்றான் தோட்டத்து மலர்.

தோழி செங்கொடிக்கு!

எப்படி இருக்கிறாய் என்று நான் இனி உன்னைக் கேட்க முடியாது. எங்கே இருக்கிறாய் என்பது மட்டுமே தெரியும். காஞ்சி மக்கள் மன்றத்தில், நீ வளர்ந்த கம்யூனில் இருக்கிறாய். மண்ணில் புதைக்கப்பட்டு இருக்கிறாய் நீ. இன்னும் சில நாட்களில் உன் உடல் புழுக்களுக்கு இரையாகக் கூடும். புன்னகை தவழ்ந்த உன் முகம் செல்லரித்துப் போகக் கூடும். பறையெடுத்து ஆடிய உன் கைகள் இற்றுப்போய் வெறும் எலும்புகளாக மட்டுமே மிஞ்சக் கூடும். ஆனாலும் நீ வாழ்கிறாய்!

அன்புத் தோழி செங்கொடி! நான் உன்னை அறிந்தவளில்லை. நமக்குள் அறிமுகம் இல்லை. ஆனால் எனக்குத் தெரியும். நீ சாதாரணமானவள் அல்ல. அதை உன் பெயரே பறைசாற்றும். செங்கொடி...பட்டொளி வீசிப் பறக்க வேண்டும். ஆனால் எம்மை விட்டுப் பிரிந்து பறந்து சென்றுவிட்டது நியாயமா தோழி?

மூன்று உயிர்கள் மரித்துப் போய்விடக்கூடாது என்று தமிழகமே திரண்டு போராடுகையில், நீயும் போராடி இருக்கிறாய். போராட்டத்தில் உன்னை இணைத்துக் கொண்டிருக்கிறாய். .

உன் மரணத்தை கோழைத்தனம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் வீரமரணம் என்றும் நான் சொல்ல மாட்டேன். வெறும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் நீ முடிவெடுக்கவில்லை. உன் முடிவை முட்டாள்த்தனம் என்றும் என்னால் போகிறபோக்கில் சொல்லிவிட முடியவில்லை. முதல் நாள் முத்துக்குமாரின் கடிதத்தை நீ வாசித்திருக்கிறாய். ‘முத்துக்குமார் போல இன்னொருவர் இன்றைய சூழலில் தன்னைத் தானே மாய்த்துக்கொண்டால் அன்று எழுந்த எழுச்சி போல இன்றைக்கு ஏற்படுமா?’ என்று நீ உன் தோழிகளிடம் கேட்டிருக்கிறாய் என்று அவர்கள் இப்போது சொல்கிறார்கள்.


நீ நினைத்ததை செய்து முடித்த திருப்தியோடு இப்போது உறங்கிக்கொண்டிருக்கிறாய். ஆனால் உன்னைப் பிரிந்து வாடும் நெஞ்சங்கள்?

உன் உடல் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்த அந்த இரவு, வெளியே கூட்டம் அலைமோதியது. அனைவர் கரங்களிலும் நீ எழுதிய கடித்த்தின் நகல் உன் கையெழுத்தில்! சுதந்திரத்திற்குப் பின்னான இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் காரணத்துக்காக உயிர் நீத்த முதல் பெண் நீ தான் என்பதை திருமாவளவன் ஊடகங்களுக்கு எடுத்துரைத்தார். அப்போது என் உடல் சிலிர்த்தது. ஆனால் அதையும் மீறி உன் மரணம் எத்தகைய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது, அதிர்ச்சியளித்தது என்பதை நீ அறிய மாட்டாய். உனக்குத் தெரிந்திருக்கும் செங்கொடி! சிவகங்கைச் சீமை வெள்ளையனிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது, உடலெங்கும் வெடிமருந்தைக் கட்டிக்கொண்டு வெள்ளையர்களின் ராணுவக்கிடங்கில் குதித்து ஆயுதங்களை அழித்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த குயிலியின் கதையை நீ அறிந்திருப்பாய். உன் மரணத்தை நீயே தேடிக்கொண்டது பற்றிய விமர்சனங்கள் ஆயிரம் இருந்தாலும், நீ நம்பிய உன் கொள்கைக்கு நீ உண்மையாய் இருந்திருக்கிறாய். அந்த உண்மைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உன் உடலைக் காண நான் உள்ளே செல்லவில்லை. என்னைப் போலவே பலரும் உன்னை அப்படியொரு கோலத்தில் பார்க்க மனது வராமல் நின்றிருந்தனர். அந்த இரவு பூராவும் காஞ்சி அரசு மருத்துவமனை வளாகம் மனிதத்தால் நிரம்பியது.

மறுநாள் மதியம் உன் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு காஞ்சி மக்கள் மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நீ வாழ்ந்த இடத்திற்குப் பயணமானது உன் உடல். பத்து கிலோமீட்டர் தொலைவை உன் உடலைச் சுமந்த வாகனம் கடந்து சென்றது. பல்வேறு இயக்கத்தினர் கலந்து கொண்ட அந்த ஊர்வலம் காஞ்சி நகரத்தின் வீதிகளில் சென்றபோது காஞ்சி நகர மக்கள் வீதியின் இருமருங்கிலும் நின்றனர். நகர எல்லையைக் கடந்து ஒரு வயல்பகுதியில் உன் உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது, தொலைவில் ஒரு பெண் வயற்காட்டினிடையே உன்னைப் பார்க்க ஓட்டமாய் ஓடிவந்தார். கூட்டமாய் ஓரிடத்தில் பெண்கள் திரண்டு உன் அழகோவியமான உருவத்தை வரைந்த பதாகையை உயர்த்திப் பிடித்து வந்த தோழர்களிடம் சொல்லி அந்த பதாகையை கையில் வாங்கித் தொட்டுப் பார்த்து கண்ணீர் விட்டு கதறியதை எப்படி நாங்கள் மறப்பது?

வழியெங்கும் மக்கள் எழுப்பிய உணர்ச்சிமிகு முழக்கங்கள் விண்ணைப்பிளந்தன. ஆனால் கேட்பதற்கு உன் செவிகள் செயலிழந்திருந்தன. பத்து கிலோமீட்டர் தொலைவைக் கடந்து நீ வாழ்ந்த ஊரான மங்ககலப்பாடிக்கு உயிரற்ற உடலாய் சென்று சேர்ந்தாய. உன்னோடு வாழ்ந்த மக்களின் கதறலுக்கிடையே உன் உடல் இறக்கப்பட்டது.

அந்த இடத்தில் தானே நீ நடமாடியிருப்பாய்? அந்த இடத்தில் தானே நீ உன் ஆட்டக்கலைப் பயிற்சிகளையும் ஒத்திகைகளையும் மேற்கொண்டிருப்பாய்? அந்த இடத்தில்தானே உன் அரசியல் அறிவை நீ வளர்த்துக் கொண்டிருப்பாய்? அந்த இடத்தில் தானே உன் கனவுகள் அலைந்து கொண்டிருக்கும்? நீ வாழ்ந்த வாழ்க்கை எல்லோருக்கும் வாய்க்காது. கம்யூன் வாழ்க்கை என்றால் நம்மில் பலருக்குத் தெரியாது. குடும்பத்தை விட்டு நீங்கி ஒரு பொதுவான இடத்தில் பொதுவான செயல்பாட்டுத் திட்டத்தோடு இணைந்து கூட்டாக வாழும் வாழ்க்கை உனக்கு வாய்த்திருந்தது. பாலின பேதமின்றி வாழும் அந்த வாழ்க்கை வாழ்ந்த நீ கொடுத்து வைத்தவள். ஆனால் அந்த வாழ்க்கையை நீ முழுதுவதுமாக வாழாமல் போய்விட்டதில் தான் எங்களுக்கு வருத்தம்!

உன் உடல் கீழ்த்தளத்தில் வைக்கப்பட்டு உன்னை உன் தோழர்கள் வந்துப் பார்த்து உனக்கு அஞ்சலி செலுத்தியவண்ணம் இருக்க, நீ அமைதியாய் கண்ணாடிப் பேழைக்குள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாய். மேல்தளத்தில் உன் உடலை என்ன செய்வது என்கிற விவாதம் நடந்துகொண்டிருந்தது. பொதுமக்கள் அஞ்சலிக்காக உன் உடல் சென்னையில் வைக்கப்படவேண்டும் என்பது பலரது கோரிக்கையாக இருந்தது. உன்னோடிருந்த காஞ்சி மக்கள் மன்றத்தின் மகேஷும், ஜெஸ்ஸியும், காவல்துறை அனுமதியளித்தால் எடுத்துச்செல்லுங்கள் என்றனர். ஆனால் காவல்துறை அனுமதியளிக்குமா? பல இயக்கங்களின் பிரதிநிதிகள், தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் கூடியிருந்தனர் செங்கொடி!. அரசியல் கட்சித்தலைவர்கள், தலித் தலைவர்கள், இடதுசாரித் தலைவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என்று ஒரு முப்பது பேர் வரை அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டோம் தோழி!

உன் உடலை எங்கே புதைப்பது? என்ன செய்வது? என்று முடிவு செய்வதற்காக கூட்டப்பட்டக் கூட்டம் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நடந்தது. வெளியே வந்திருந்த கூட்டம் பதைபதைப்பாகக் காத்திருக்க, அவரவர் கருத்தை அவரவர் முன்வைக்க சூடான விவாதங்கள் தொடங்கின. இளைஞர்கள் ஒருபுறம் உன் உடலை சென்னைக்கு எடுத்துச் சென்று பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டும் என்று கடுமையாக வாதிட்டனர். ஒரு கட்டத்தில் கடும் வாக்குவாதம் நடக்க, சென்னைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை எடுத்துச் சொன்னார்கள் தலைவர்கள். எத்தனை சிக்கல்கள் வந்தாலும், குண்டடிப்பட்டாலும் அதைத் தாங்கத்தயாராக இருப்பதாக இவர்கள் சொன்னார்கள். ஆனால் தலைவர்களோ அதனை வேண்டாமென்றனர். “எங்களுக்கு வழிகாட்டுங்கள். உங்கள் வழிகாட்டுதல் படி நாங்கள் செயல்படுகிறோம். நீங்கள் மனது வைத்தால் காவல்துறையிடம் பேசி அனுமதி வாங்க முடியும்” என்று அரசியல் கட்சித் தலைவர்களிடம் கேட்டனர் பல்வேறு அமைப்பினர். ஆனால் அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை மீண்டும் மீண்டும் எடுத்துரைத்தனர் தலைவர்கள். ஒரு கட்டத்தில் இளைஞர்கள் உணர்ச்சி வேகத்தில் பேசுவதாக தலைவர்கள் கூறினார்கள். நீ எழுதிய கடிதத்தைச் சுட்டிக்காட்டி “செங்கொடியின் கடிதத்துக்கு என்ன பொருள்? அவள் கூறிய போராட்டத்தை நாம் முன்னெடுக்கப் போவதில்லையா?” என்று கேட்டனர் சிலர். இறுதியில் முடிவு நீ சார்ந்த காஞ்சி மக்கள் மன்றத்தின் கைகளில் விடப்பட்டது. நீ வாழ்ந்த அந்த வீட்டில்தான் உன்னைப் புதைக்க வேண்டுமென்று ஏற்கனவே நீ கூறியிருந்ததை சுட்டிக்காட்டிய மகேஷ் உன் உடலை எடுத்துப் போவது குறித்து எந்த ஆட்சேபணையும் இல்லையென்றும், ஆனால் எந்த சிக்கலும் இல்லாமல், காவல்துறையின் அனுமதியோடுதான் எடுத்துப் போக வேண்டும். எங்கு எடுத்துச் சென்றாலும் மீண்டும் இங்கே, இதே வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்து ஒப்படைத்துவிட வேண்டும் என்று கூறிவிட, அதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டன. இறுதியில் காவல்துறையின் அனுமதி பெறும் அளவுக்கு இன்னமும் சக்தி பெறாத சிறிய இயக்கத்தினரும், தனிநபர்களும் தங்கள் கோரிக்கையை ஏமாற்றத்தோடு கைவிட்டனர். உன் உடலை அங்கேயே அடுத்த நாள் முழுதும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைப்பதென்றும், அதற்கடுத்த நாள் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் முடிவானது. இத்தனையும் மேலே மாடியில் நடக்கையில் நீ கீழே உன் சுற்றத்தார் புடைசூழக் கிடந்தாய்.

அன்றைக்கு மங்கலப்பாடி கிராமத்தை விட்டுக் கிளம்புகையில் மனம் கனத்துக் கிடந்தது. அதற்கடுத்த முழு நாளும் நீ அங்கேயே நீ வாழ்ந்த வீட்டிலேயே இருந்தாய். உன் சிரிப்பொலி அலங்கரித்த அந்த வீட்டில் உன் கனத்த மௌனம் காற்றில் பரவியிருந்த்து. உன் இறுதி நிகழ்வுக்காகக் காத்திருந்தாய். 31 ஆகஸ்ட் அன்று காலை, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரணதண்டனைக்கு நீதிமன்றம் எட்டுவார காலத்தடை விதித்தது. மகிழ்ச்சியில் துள்ளிய பலரும் “செங்கொடி ஒரு நாள் பொறுத்திருந்து பார்த்திருக்கலாமே” என்று ஆதங்கப்பட்டதைக் காண முடிந்தது. உன் இறுதிச்சடங்கிற்கு பல ஊர்களில் இருந்தும் வந்திருந்த மக்கள் திரளுக்கு நடுவே உன் உடல் புதைக்கப்பட்டதாக செய்தி வந்தது..

உன் உடலை என்ன செய்வது என்று முடிவெடுக்கும் கூட்டத்தில் நான் கேட்ட ஒரு குரல் இப்படிச் சொன்னது “சரியான வழிகாட்டுதல் இல்லாத, சரியான தலைமை இல்லாத ஒரு சமூகத்தில் தற்கொலைகளை தவிர்க்கமுடியாது. ஆனால் அது தற்கொலை அல்ல. கொலைதான். செங்கொடியின் மரணம் தற்கொலை அல்ல. அது கொலைதான்” என்றது அந்தக் குரல்.
ஆமாம் செங்கொடி! கையறு நிலையில் ஒரு சமூகமே நின்றுகொண்டிருக்கையில் வேறு வழியின்றிதான் இந்த நிலைக்கு நீ வந்திருப்பாய். உன் மரணம் தமிழக அரசிற்கு விடப்பட்ட எச்சரிக்கை மணியென்பதை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சொல்கிறது. முதல்நாள் குடியரசுத்தலைவரின் ஆணையை மாற்ற முதல்வருக்கு அதிகாரமில்லை என்றவர் மறுநாளே இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றியதில் உன் மரணத்திற்கும், உன் உடலைச் சுமந்து காஞ்சி நகர் வீதிகளில் வந்த அந்த ஊர்வலத்திற்கும் பங்கிருக்கிறது. ஒரு வகையில் நீ நினைத்ததை சாதித்துவிட்டாய். ஆனால் நீ எங்களுக்குத் திரும்பக் கிடைப்பாயா? தலித்-பழங்குடி சமூகமான இருளர் சமூகத்திலிருந்து சமூகத்திற்காகப் போராட வந்த, போராட்ட குணம் கொண்ட, உன்னை நாங்கள் இழந்து விட்டோமே! இந்த இழப்பை ஈடுசெய்ய முடியுமா? உன் மரணத்திற்குப் பின் உன் பாதையை பலர் தேர்ந்தெடுத்துவிடக்கூடாதே என்கிற பதைபதைப்பு தந்த பலரின் மரண அவஸ்தையை வார்த்தைகளில் விவரிக்க இயலாது செங்கொடி! நீ போய்விட்டாய். ஆனால் உன்னை யாரும் பின் தொடர்ந்து விடக்கூடாது என்பதே எங்கள் கவலை. உயிரின் மதிப்பு உன்னை இழந்த பின் அதிகம் தெரிகிறது செங்கொடி! மூவர் உயிர்காக்க நடந்த போராட்டத்தில் உன் உயிரை நீ மாய்த்துக் கொளவதை எப்படிச் சகிப்பது? பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் உன் மரணச்செய்தி கேட்டபோது துடித்துக் கதறினார். “வேண்டாம் பிள்ளைகளா! நான் என் மகனின் உயிரைக் காப்பாற்றத்தானே 21 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கிறேன். இன்னொரு உயிரைக் கொடுத்தா என் மகன் உயிரைக் காக்க வேண்டும். ஏன் இப்படிச் செய்தாய் செங்கொடி?” என்று கதறினார். தீராத துன்பத்தை உன் மரணம் அவருக்குத் தந்து விட்டதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

செங்கொடி! இப்படி போராட்டக்களத்தில் ஒவ்வொருவரும் உயிர் நீக்க நினைத்தால்...போராடயாரிருப்பார்? உன்னோடு போகட்டும் இந்த உயிர் நீக்கும் போராட்டம். வேறொருவர் இப்படி உயிர்நீத்து “ஆமாம்! எங்கள் சமூகம் வழிகாட்டுதலின்றித்தான் இருக்கிறது.” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வேண்டாம்! இது எங்கள் கனவு. ஆனால் கனவுகள் அனைத்தும் உண்மையாகி விடுவதில்லை.

போராட்டத்தன்மை மற்றும் போராட்டக் களத்தின் மீதான விமர்சனமாய் உன் மரணத்தை நீ அளிக்க, அதைக் கொச்சைப்படுத்தி ஆதாயம் தேடும் ஊடகங்களின் பார்ப்பன ஆணாதிக்கத் திமிரை அடக்க பல கோடி செங்கொடிகள் உருவாகி, உயிர் நீக்காமல் போராட வேண்டும்!

செங்கொடி! உனக்குப் பிரியாவிடை கொடுத்தனுப்பினோம். நீ வாழ்கிறாய் எங்கள் நெஞ்சங்களில்! ஆனால், எங்கள் நெஞ்சங்களில் வாழ்வதை விட, எங்களோடு நீ வாழ்ந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்போம். இந்த மகிழ்ச்சியை தமிழ்ச்சமூகம் எங்களுக்கு விட்டு வைக்குமா? இனியாவது?
இந்தக் கேள்விக்கு விடை உன்னைப்போன்ற, என்னைப்போன்ற யார் கையிலும் இல்லை. ஒரு தலைமையோ, வழிகாட்டுதலோ இல்லாத இச்சமூகம் என்ன செய்யப் போகிறது? தற்கொலைகளால் போராட்டக்களத்தை நிரப்பப் போகிறதா? நம் வரலாறு தற்கொலைத் தேதிகளால் எழுதப்படுமா?

சாதியை கணக்கிலெடுக்காத தமிழ்த்தேசியமும், மக்களின் விருப்பத்தை அல்ல இயக்கத் தொண்டர்களின் விருப்பத்தைக்கூட அறியாத இடது அரசியலும், தங்களுக்கான அரசியலை முன்னெடுக்க முடியமல் தொடர்ந்து தங்களின் இருப்புக்காய் போராடும் தலித் அரசியலும், தொடங்கிய பாதையை விட்டு வெகுதூரம் போய்விட்ட திராவிட அரசியலும், எங்கனம் எங்களுக்குத் வழிகாட்டக் கூடும்? இந்த உண்மையை உரக்கச் சொல்வதற்காக நீ மாய்த்துக்கொண்டாயோ?

செங்கொடி! உன்னை யாரும் பின் தொடர்கிறார்களா என்று திரும்பிப் பார்த்துக்கொண்டே உன் பாதையில் செல்! பின் தொடர்ந்தால் கொலைகள் தொடர்கின்றன என்று பொருள். அது தனிமனிதக் கொலை அல்ல. ஒரு சமூகக் கொலை. சித்தாந்தங்களை கற்பித்தவர்களின் தோல்வி. கற்றுக்கொண்டவர்களின் தோல்வி. கையறு நிலையின் வெற்றி.

ஏதாவது செய்யச் சொல்கிறது உணர்வு. என்னவென்று கேட்கிறது அறிவு. உணர்வுக்கும், அறிவுக்குமான ஊடாட்டத்தில் மெல்ல விலகுகிறது பனித்திரை. எதிரே பிரம்மாண்டமாய் நிற்கிறது என் கையறு நிலை. கிழித்துச்செல்ல எத்தனிக்கிறேன். கிழிபட்டுப் போகிறேன். கிழிசல் ஓட்டைகளுக்கு இடையே நம்பிக்கை கண் சிமிட்டுகிறது நட்சத்திரங்களின் வடிவில்! – இப்படித்தான் முடிக்க நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை தோழி! கிழிபட்டுப் போவதுதான் தற்போதைய அரசியல் சூழலில் சாத்தியம். உனக்கு நேர்ந்ததும் இதுவே.

அனைத்துக் கதவுகளும் இறுக மூடிக்கொண்ட ஒரு வீட்டினுள், வெளியேற இயலாமல், மீட்பருக்காகக் காத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் ஒரு சின்னஞ்சிறு குழந்தையைப் போல இன்னும் எத்தனை காலம் கழியப்போகிறது? விடைகாண இயலாத இப்படியான பல கேள்விகளால் நிறைந்திருக்கிறது மனம். கேள்விகளின் கனம் போலவே துயரத்தின் கனமும், இப்பூமியில் காற்று நிரம்பியிருப்பது போல மனமெங்கும் நிரம்பியிருக்கின்றது தோழி!

இப்படிக்கு,
உன் தோழி
நன்றி : கவின் மலர்

23 July, 2011







கந்தல் கோவணம்!
 
 
வெற்றி தோல்வி!
 
 
நடந்து முடிந்த உள்ளூராச்சி மன்ற தேர்தலில் தமிழர் தரப்பு வெற்றி அடைய போகுதா தோல்வி அடைய போகுதா என்பது முக்கியம் அல்ல, இது சிங்களவனும் , சிங்கள இராணுவமும் சேர்ந்து நடத்தும் தேர்தல். இதில தமிழர் தரப்பு வென்றால் என்ன தோற்றால் என்ன, என்ன நடந்தாலும் சிங்களம் சங்கிலியன் சிலைகளையும் , பண்டார வன்னியன் சிலைகளையும் அழித்துக்கொண்டே தான் இருக்கும் அதில் மாற்று கருத்துக்கு இடமேதும் இல்லை. கடத்தல்கள் , கொலைகள் பாலியல் வன்முறைகள் நடந்தவண்ணமே தான் இருக்கும், ஒட்டுக்குழுக்களும், ஓட்டாக்குளுக்களும் வலம் வந்தவண்ணமே தான் இருப்பார்கள் . இருப்பினும் வெற்றி செய்தி தமிழர் தரப்பிற்கு மகிழ்ச்சிதான்.
 
 
இத்தேர்தலில் வென்று எதை நம்மால் சாதிக்க முடியும்? நகரத்திலையோ, கிராமத்திலையோ கழிவறைய கட்டுவதானாலும் சரி சுத்தப்படுத்துவதானாலும் சரி புத்தனின் ஆசி பெற வேணும். இதன் மூலம் ஏதேனும் சம வாய்ப்பையோ , இல்ல சம சம உரிமைகளையோ சிங்களம் தந்துவிட போகிறதா? இல்லவே இல்லையே போதாததுக்கு ஒன்றே ஒன்று செய்யலாம் ? சிங்களத்தின் சதி திட்ட விகிதாசார தேர்தல் முறைப்படி சொற்ப வாக்கு வித்தியாசத்தில் , ஒரு சில உறுப்பினர்களை அதிகமாக பெற்று, கள்ள வாக்குகள், காடையர்கள், குண்டர்கள், இதெயெல்லாம் தாண்டி உலகத்துக்கு "நாம் தமிழர்" என்பதனை நிரூபிக்கலாம். அதைவிட வேறெதுவும் நடக்க போறது இல்லை.
 
 
யாருக்கு இலாபம்?
 
 
இந்த தேர்தல் மூலம் சிங்களத்திற்கே மிக அனுகூலமான நன்மைகள் நடந்தேற போகின்றன!
 
 
உலகத்துக்கு தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றாக இருக்குறோம் என்று காட்ட இந்த தேர்தலை பயன் படுத்தலாம்
 
 
நாட்டில எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை என்பதை காண்பிக்கலாம்
 
 
அடக்குமுறை மூலம் சில வெற்றிகளை பெற்று தமிழர்களே சிங்கள கட்ச்சிகளை ஏற்றுகொள்கிறார்கள் என்பதனை கான்பிக்காம்
 
 
எந்தவிதமான தீர்வு திட்டமோ , அதிகார பகிர்வோ தேவை இல்லை நிரூபிக்கலாம்.
 
 
மொத்தத்தில ஒரு தேர்தல ஒரு இனபடுகொலை அரசு நடத்தி சில வெற்றிகளை பெற்றால் இந்த உலக யனநாயக பயங்கரவாத நாடுகள் , அந்த நாட்டில எந்த பிரச்சினையும் இல்லை என்பதனை ஏற்று கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம். அகவே இந்த தேர்தல் நமக்கு ஆப்பே தவிர வேறொன்றும் இல்லை. சரி பாடையை தூக்கி விட்டார்கள் சுடலை வரை கொண்டு செல்லட்டும்.
 
 
கூட்டமைப்பு, ராசபக்சே பேச்சு?
 
ஏன் நாம் சிங்களத்துடன் பேச வேண்டும்? 60 ஆண்டுகளுக்கு மேலாக சிங்களத்துடன் பேசியாகிவிட்டது, ஐந்து நூறு ஆயிரம் மக்களையும், மாவீரர்களையும் வித்தாக கொடுத்தாகி விட்டது , எந்த மனித குலமோ, உயிரினமோ கண்டிராத பேரழிவை, கொடூரமான, சகிக்க முடியாத கொடுமைகளை சிங்களமும் , இந்திதியாவும் நமக்கு ஏற்படுத்தி விட்டன.
 
 
இப்படி கொடுரமானவர்களுடன் ஏன் பேச வேண்டும்? இவர்கள் என்னத்தை தந்து கிழிக்க போகிறார்கள்? இப்படியே இவர்களுடன் பேசி பேசி அறுபதாண்டு காலம் ஓடி விட்டன , அதில் ராசா பக்ச ஆனாலும் சரி , ரணில் ஆனாலும் சரி தமிழர் தரப்புக்கு எந்த விதமான எலும்பு துண்டை போடவும் தயாராக இல்லை. இப்படியே போனால் பல அறுபதான்டுகளை கடக்க வேண்டி இருக்கும். சிங்களம் என்றைக்குமே மாறாதது, நாம தான் சுக்கிரீவன் தொடக்கம் கருணாநிதிவரை துரோகிகளாகி தூள் கிளப்புறம். ஆனா படியால் இந்த பேச்சுவார்த்தையில் இருந்து விலத்தி இருப்பதே மிக மிக நல்லது.
 
 
காந்தியின் கோவணம்!!!!!!!!!!
 
 
இந்திரா யீ , ராசீவ் யீ சோனியா யீ வரை இந்த கோவணத்தை கட்டி கட்டி அவுதாச்சு, அனா எவராவது அத துவைப்பார் இல்ல . 1987 ராசீவ் யீ இதில ஒரு துண்ட கிழிச்சு ஜே அர் இற்கு கட்டிவிட , அத ராசபக்ச அவுத்து இப்ப எனக்கு அளவில்லா இந்த கோவணம் பழசு மணக்குது வேண்டாம் எண்டுறான், எல்லாரும் கிழிச்சாச்சு மீதமுள்ள கோவணம் நமக்கு சரிப்பட்டு வராது எண்டு தமிழர் தரப்பு நாமள் சொல்லுறம் . 2009 இல் சோனியா யீ இந்த துண்டில் ஒருதுண்ட கிழிச்சு கருணாநிதிக்கு வாயுக்க திணிச்சி வாய அடைச்சத கேள்வி! இடைக்கிட சிவசங்கர் மேனன், நாராயணன், நருபமா பாதிய பாதி பாதியா கிழிச்சு கட்டிக்கொண்டு டெல்லி யும் கொழும்புமா பரந்த்தொண்டு திரியுறாங்கள் அதிண்ட மனம் தாங்காமல் பாதி தமிழன் செத்தே போயிட்டான். இன்னும் இந்தியா காரன் இந்த கோவணத்த கட்டி கிட்டு பரப்பனாக இருந்தால் மீதமுள்ள தமிழனும் செத்தே போயிடுவான் மணம் தாங்க முடியாமல். மொத்தத்தில வேட்டியோட திரிஞ்ச தமிழன இந்தியாக்காரன் கொவனமும் இல்லாமல் ஆக்கிட்டான் அம்புட்டு பெருமைக்கு உரியவன் அவன்தான் அதுதான் உண்மை.
 
 
மீண்டும் இந்த கந்தல் கோவணத்த இந்தியகாரன் கொண்டு திரியுறான் தமிழர் தரப்பிற்கு கட்டிவிட இதை தமிழர் தரப்பு ஏற்று கொண்டால் மீண்டும் 1000 ஆண்டுகள் கந்தல் , கட்டமுடியாத கோவணத்தோட . இல்ல அம்மணமா தான் தமிழன் திரிய வேண்டி இருக்கும், ஆனபடியால் இதை தீயிட்டு கொளுத்துவதே நல்லது, அதை விடுத்து வல்லாதிக்க இந்திய கொலைகாரர்களுக்கு அடிபணிந்தது மீண்டும் ஒரு வரலாற்று தவறை தமிழர் தரப்பு செய்ய கூட்டாது என்பதே தமிழர் கனவு.
சிங்களத்தின் சூழ்ச்சி?
 
எந்த சிங்கள கட்ச்சிக்கோ , இல்ல சிங்கள மக்களுக்கோ தமிழர் தரப்பு உரிமையை விட்டு கொடுக்க எண்ணமில்லை உது தான் அடிப்படை உண்மை, இப்ப சிங்களம் இனப்படுகொலையில மாட்டி கொண்டு தன்ன காப்பாத்த யார் வருவார் என்று நடு நடுங்குகிறது , அனால் முழு சிங்கள தேசமும் ஒன்னாக எதிர்கொள்ள தயாராகி நிக்குறது, அனால் நம்ம ச்க்கிரீவன் வளிவந்த கருணா, டக்ளச்சு சிங்கள கொலை காரர்களை பல்லக்கில தூக்குராணுக . இந்த காந்தி நாட்டு பயங்கர வாதிகளும் கொலை நடுங்குராணுங்கள் , எங்க ராசபக்கச எல்லா தமிழ் இனத்தை அழிக்க சொல்லி குடுத்த தகவல்கள, இராணுவ உதவிகள மற்றும் எல்லா இரகசித்தையும் வெளியிட்டு விடுவானே?, சனல் 4 மாதிரி , டெல்லி 4 என்று தயாரிச்சு ராசா பக்ச வெளிய்ட்ட்டு விடுவானோ? , நாம என்ன பண்ணலாம்?, நம்ம அகிம்சை காந்திண்ட கோவணமும் உலகலவில கிழிச்சு போடுமே, நாற வெளிக்குட்டுடுமே என்னு கலங்குறான். .
 
 
 
அப்படி எதுகும் குடுக்காத சிங்களம் நின்மதிய இருக்க முடியாது அதனால புத்தனும் காந்தியும் சேர்ந்து ஆத்தாக் கொடுமைக்கு அந்த 1987 ஆம் ஆண்டு ராசீவ் கோவணத்த திருப்ப தமிழனுக்கு கட்டிவிட முயற்சிக்கலாம் , அதான் இப்ப இருந்தே பேசுறான் 13 ஆவது திருத்த சட்டம் திருத்த சட்டம் என்னு, அந்த கொதாரில ஒண்ணுமே இல்ல , இருந்தாப்போல அதற்கும் மேல எண்டுறன் அதற்கும் மேல 14 தான். அது தமிழர் நிலங்கள வடக்கு, கிழக்கு என கூறுபோட்டு , நம்மள பிரிக்குறது இதுதான் முதல் சதி., எந்நேரத்திலும் மாநில ஆட்சி கலைக்க படுமாம் அந்த காந்திண்ட ஆலோசன. தமிழனுக்கும் புத்தனுக்கும் நடுவில தரகரா வந்து தானே கையொப்பம் இட்டவன் இந்த முட்டாள் காந்தி. அப்ப இவன எப்படி இன்னும் நம்புறது ?, அதனால் தான் அது வேண்டாம் என்னுதானே காந்திய பயங்கரவாதிகளோட மோதினோம், தன்னுடைய ஊழலை மறைக்க ராசீவ் இவளவு படு கொலைகளையும் புரிந்தானே படுபாவி (அதான் தலை சிதறி சாவானான்). இறுதியா 100000 அப்பாவி மக்களை கொண்ணு காந்தி தான் உலகத்திலேயே அகிம்சா ( கொலைகார ) மூர்த்தி எண்டு காட்டி புட்டான் , இடக்குட அது உள்ள நாட்டு பிடச்சின, உள்ள நாட்டு பிடச்சின என்று பீலா வேற. சுமசும், பகவத் சிங்கும் நாட்டுக்காக போராடிய மாவீரர்கள், நாமள் எல்லாம் பயங்கர வாதிகள், இந்தியா காரண்ட அளப்பய கேட்டால் நச்ச குடுச்சி செத்திடலாம்.
 
அவசரமும் அவசியமும் (தமிழ் கூட்டமைப்பு)
 
 
 
இனி ஒண்ணுமே செய்ய முடியாது, அதனால தருவதை தரட்டும் என்று எண்ணி தமிழர் தரப்பு சிங்களத்திடம் பேச்சுவார்த்தை என்னும் குழினுள் விழுந்து விட கூடாது, சிங்களம் ஆத்தாக் கொடுமைக்கு இப்படியான தீர்வு திட்டங்களை காந்தி உடன் சேர்ந்து திணிக்க பாக்குறது. இதி சரியாக புரிந்து கொண்ண்டு இப்பேச்சு வர்த்தியை புறக்கணிக்க வேண்டும், புத்தனுடன் நாம் இனி பேச வேண்டிய அவசியம் இல்லை, தமிழ் ஈழ பிரச்சினை என்பது தற்போது உலகளாவிய ரீதியில் முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது ., அதனால் சிங்கள இந்திய சதி வலைக்குள் நாம் விளுவோமானால் மீண்டும் 1000 வருடங்களுக்கு நாம் அடிமைப்பட்டு கிடக்க நேரிடும் , இன்று உலகம் நம்ம பக்கம் உள்ளது இதை சரியாக பயன் படுத்தி கொள்ள வேண்டும்,அப்படியானால் என்ன பன்னலா.இந்த பேச்சு வார்த்தையில் இருந்தது தமிழர் தரப்பு விலக வேண்ண்டும். இதுதான் இந்த விடுதலை போராட்டத்துக்காக இன்னுயிரை கொடுத்த மாவீரர்களுக்கும், மக்களுக்கும் கூட்டமைப்பு செய்யும் முதல் கடமையாக இருக்கும்.
சில கோரிக்கைகளை முன்னுறுத்தி
 
 
அப்படி விலகாமல் பேசுவதானால் சில கோரிக்கைகளை முன்னுறுத்தி புத்தனுடன் பேசலாம் அதாவதுய் இன்று உலகம் நமது பக்கம் இருப்பதை பயன் படுத்தி
 
நாம் 50 /50 ஐபதுக்கு ஐம்பது என்ற கோரிக்கையை முன் வைத்து பேச வேண்டும் அதற்க்கு சிங்களம் ஒத்து வராத விடத்து
ஒன்று பட்ட சிறி லங்காவிற்க்குள் குப்பை கொட்டுவதா இல்ல தனித்து பிரிந்து செல்வதா என்பதனை, எமது தலைவிதியை தீர்மானிக்க தமிழ் மக்களிடம் அதாவது வடக்கு கிழக்கு , புலம் பெயர் தமிழரிடம் உலக பார்வையுடன் தென்
 
 
சூடானில் நடந்ததை போன்ற................
 
 
வாக்கெடுப்பை நடத்த உலக நாடுகளிடம் , ஐ நா சபையிடம், ( பாண் கீ மூன் இருக்கும்வர அது முடியாது , ஏன்னா அவரு சோனியா யி சம்பந்தி அல்ல வா!?), கோரலாம்.
அதுக்கும் முடியாவிடத்து நம்மை நாமே தனி நாடாக பிரகடன படித்தி கொள்ள வேண்டியதுதான்.
 
 
நமக்கு நீண்ட நாளா ஒரு கேள்வி மனச குடையிறது, அது என்ன சிறி லங்காவின் அனைத்து மக்களும் ஏற்று கொள்ள கூடிய தீர்வை சிறி லங்கா அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்று , இந்த காந்திய பயங்கரவாதிகளும் சில சிறி லங்கா நடப்பு நாடுகளும் ஊளை இடுகின்றன, வீனா போன பய புள்ளகளா , தமிழ் மக்களுக்கு தான் பிரச்சன , அப்புறம் ஏன் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வை எட்ட வேண்டும்? , அவர்கள் விரும்பிற தீர்வைதானே அவர்களுக்கு வழங்க வேண்டும் , அனைத்து மக்களும் விருப்பபடுற தீர்வென்றால் சிங்கள பயங்கர வாதிகள் விரும்ப மாட்டார்கள் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க, அப்புறம் எப்படி தீர்வை வைக்குறது? இந்த காந்திய பயங்கர வாதிகளின் சூழ்ச்சி பட்டு கேவலமானதும் கொடுமையானதும் அப்பா.
மீண்டும் ஒரு வரலாற்று தவறை.................... !
 
 
மீண்டும் ஒரு வரலாற்று தவறை தமிழன் செய்வானே அனால் அது இன்னும் பல நூறு ஆண்டுக்ளளுக்கு மேலாக தமிழ் இனத்தை அழிவு பாதிக்கும் , அடிமை நிலைக்கும் இட்டு செல்லும். அதாவது
 
 
அன்று
 
 
சுந்தரலிங்கம் ஒரு கையெழுத்தினை இட்டதினால் நாம் இன்று 1000 ஆண்டு அடிமை தனத்தில் இருந்து மீளவில்லை, யி.யி பொன்னம்பலம் ஒரே ஒரு வாக்கை இட்டு நமது 500000 மக்களை எதிலிகலாக்கிய , நிலை மீண்டும் நமை வந்தடைய கூடாது
இன்று
மீண்டும் சம்பந்தன்( சுந்தரலிங் )களும் , டக்லச் (பொன்னம்பலங்)களும் செய்யம் தவறினால் 100 ஆண்டுகள் சென்றபின் எனது அடுத்த தலைமுறை ............
 
"நாடுகள் தோறும் நாம் அகதியாய் அலைந்தோம், கேட்ப்பார் இல்லாமல் நாம் ஊர் ஊராய் திரிந்தோம் "
 
 
என்ற நிலை தடற கூடாது என்பதே தமிழ் இனத்தின் அவா , அதனால் அவசர படாமல் சரியான சந்தர்ப்பங்களை பயன் படுத்து, தனிச்சைக்கான முடிபுகளை எடுக்காது, உலக தமிழருடனும் , புலம் பெயர் தமிழருடனும் ,தமிழ் ஈழ தமிழருடனும் மற்றும் நமக்கு ஆதரவான அமைப்புகளுடனும், நாடுகளுடனும் அகல்ந்தலோசித்து தமிழ் கூட்டமைப்போ, வேறு எந்த தரப்பாக இருந்தாலும் சரி , மிக சரியான அவதானமான முடிபை எடுப்பது சாலச் சிறந்த்துது.
இல்லை!?
 
 
காந்தியம் என்னதும் பயங்கரவாதிகளும், இந்திய என்னும் உலக பயங்கர வாத நாடும் அழிய இன்னும் 500 ஆண்டுகள் ஆகலாம், அதுவரை தமிழ் இனம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம் . இல்லை தமிழ் இனமே அழிவை நோக்கி முழுமையாக நகர்ந்திருக்கும்.
 
 

இன்று நாம் நினைத்தால் ஏன்
துனுசியாவாகவும்
எகிப்த்தாகவும்
லிபியாவாகவும் மாற முடியாது ?
தவற விடுவோமானால் தமிழன் வாழ்வு "கந்தல் கோவணம்" தான் மீண்டும் ஒரு பிரபாகரன் தோன்ற நூறு ஆண்டுகள் ஆகலாம்.
வணக்கம்
நன்றி
ராவணன்

19 July, 2011

வெளியே இருக்கறவங்க எல்லாம் அன்னா ஹசாரே(காந்தி)யும் இல்ல, உள்ள இருக்கறவங்க எல்லாம் ராசா (கோட்ஸே)வும் இல்ல.மாற்றான் தோட்டத்து மலர் ......திண்ணை .

வெளியே இருக்கறவங்க எல்லாம் அன்னா ஹசாரே(காந்தி)யும் இல்ல, உள்ள இருக்கறவங்க எல்லாம் ராசா (கோட்ஸே)வும் இல்ல.

 

 

ஆள் பாதி ஆடை பாதி

அ.லெட்சுமணன்

 


சமீபத்தில் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு பொருள் வாங்க செல்ல வேண்டியிருந்தது. வாங்கிய உணவு பொருளை வீட்டுக்கு சென்று பிரித்து பார்த்தபோது தரமில்லாமல் இருப்பது தெரிந்தது. சரி, சிரமத்தைப் பார்க்காமல் திருப்பி கொடுத்து விட்டு, தரமான பொருளை விற்க வலியுறுத்தலாம் என்று தோன்றியது. மறு நாள் கடையின் மேலாளரை சந்தித்து பொருளின் தரக்குறைவை தெரிவித்தேன். புளுவை பார்ப்பது போல் பார்த்தார். எங்கே பொருள் என்று கோபமாக கேட்டார்? பொறுமையாக பொருளை எடுத்துக்கொடுத்தேன். இப்படி அப்படி பார்த்தார். நான் பொய் சொல்கிறென் என்று நினைத்த மாதிரி தான் இருந்தது. சரி. ஒரு பேப்பர் தருகிறேன் உங்கள் குறைபாட்டை எழுதிக்கொடுத்து விட்டு வேறு பொருள் வாங்கி செல்லுங்கள் என்றார். பொறுமையாக கடிதம் எழுதிக்கொடுத்தேன். தரமற்ற பொருளை விற்றுவிட்டோமே என்று வருத்தப்படுவராக இல்லை. இதற்கிடையே ஏரியா மானேஜருக்கு தொலைபேசியில் அழைத்து விபரம் தெரிவித்தார். தொலைபேசியை என்னிடம் கொடுத்தார். ஏரியா மானேஜர் கொஞ்சம் பொறுமையாக விசாரித்தார். அவரிடம் என்னுடைய நோக்கம் புதியதாக பொருள் வாங்கி செல்வதல்ல, தரமற்ற பொருளை 1905-லிருந்து இருப்பதாக சொல்லிக்கொள்ளும் உங்கள் நிறுவனம் விற்பதை சுட்டிக்காட்டுவது தான் என்றேன். புரிந்துகொண்டதாக தான் சொன்னார். மறு நாளே மாதிரியை பெற்று சோதிப்பதாக சொன்னார். நான் வேறு பொருளை வாங்கிகொண்டு வெளியே வந்தேன்.



நான் விற்ற பொருளில் குறையா என்று இருமாப்புடன் இருந்த ஸ்டோர்ஸ் மானேஜர் நான் ஏரியா மானேஜருடன் பேசிக்கொண்டிருந்த போது கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்த எனது அலுவலக முகவரியை படித்திருக்கிறார். ஒரு அலுவலகத்தில் வேலை செய்பவர் என்று தெரிந்த பிறகு என்னை “உட்காருங்க சார்” என்று பலமுறை “சார்” போட்டு பொறுமையாக பேச ஆரம்பித்தார். சரி, ஏன் முதலில் சரியாக பதில் அளிக்கவில்லை என்று யோசித்தேன்?
எல்லாம் இந்த உடை அணியும் விசயத்தில் தான் இருக்கிறது என்று புரிந்தது. பொதுவாக விலை உயர்ந்த ஆடை அணிபவர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள் என்று பார்த்தவுடன் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்கள். எளிமையாக இருப்பவர்களை எல்லாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவுகட்டி விடுகிறார்கள். ஆனால், உயர்ந்த இடத்தில் இருந்த போதே டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்திருந்ததை பல நிகழ்ச்சிகளில் காண முடிந்தது. அவர் எளிமை புரிந்துக்கொள்ள கூடியதாக தான் இருக்கிறது. ஆனால், உயர்ந்த இடத்துக்கு போய்தான் எளிமையாக இருக்க வேண்டும் போல இருக்கிறது. அப்போதுதான் அது விமர்சிக்கவும் போற்றவும் படும். (தற்போதைய தமிழக முதல்வர் காதணி அணிவது பத்திரிக்கைகாரர்களால் கேள்வி எழுப்பப்பட்டு அவரால் அதற்கு விளக்கமும் அளிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே).
சாதரணர்கள் எளிமையாக இருந்தால் இங்கே உரிய மரியாதையும் கிடைக்காது, அவர்களின் உணர்வுகள் புறக்கணிக்கவும் படும். ஒருவருடைய விருப்பம் சார்ந்த விசயங்கள் எல்லாம் இங்கே ஒருவருடைய அந்தஸ்தோடு தொடர்பு படுத்தப்பட்டுவிடும்.


நான்கு பேர் கூடி ஆங்கிலத்தில் உரையாடும் போது நாம் தமிழில் பேசினால், நாம் தமிழ் பற்றினால் பேசுகிறோம் என்றில்லாமல் நமக்கு ஆங்கிலத்தில் பேச தெரியாது என்று முடிவு செய்துவிடுகிறார்கள்.
மும்பை குண்டு வெடிப்பு முடிந்து சில நாட்கள் கழித்து ஒரு பெரிய ஸாப்பிங் மாலுக்கு செல்ல நேர்ந்தது. கெடுபிடிகள் அதிகமாக இருந்தது. சில நாட்கள் சோதனை இருப்பதும் பின்பு காணாமல் போவதும் திருப்பி குண்டு வெடிப்பு நடந்தவுடன் கண்காணிப்பு அதிகப்படுத்தப்படுவதும் நமக்கு ஒன்றும் புதிதல்லவே?!. நான் வழக்கம் போல என் வசதிக்கு(Convenient) ஏற்ப எனக்கு வசதியான(Convenient) சாதரண உடையில் சென்றிருந்தேன். கையில் ஒரு பை வைத்திருந்தேன். எனக்கு முன்னாள் சென்றவரும் கையில் ஒரு பை வைத்திருந்தார். மிக நேர்த்தியான உடை அணிந்திருந்தார். அவர் ஒரு சோதனையும் இன்றி உள்ளே அனுப்பபட்டார். என் முறை வந்தது. முழு சோதனைக்குப்பின் அனுமதிக்கப்பட்டேன். சிறிது நாள் கழித்து மும்பை வெடிகுண்டு வழக்கில் கைதான அப்துல் கசாப்பின் புகைப்படத்தை பார்க்க நேர்ந்தது. ஒரு நிறுவனத்தின் மேலதிகாரி போன்ற தோற்றத்துடன் இருந்தான். தீவிரவாதி எல்லாம் எங்களை மாதிரி இருக்க மாட்டான், எனக்கு முன்னாள் போனார் பாரு அவரு மாதிரி தான் இருப்பான்னு யாரு இவங்களுக்கெல்லாம் புரிய வைக்கிறது?



உடை என்பது அவரவர் வசதிக்கு(convenient) ஏற்ற படி அணிந்து வருகிறார்கள் என்பதை உணராமல் அவருடைய நேர்மை, நாணயம், வருமானம் இவற்றோடு தொடர்புபடுத்திக்கொண்டு விடுகிறார்கள். இன்றும் கூட கிராமங்களில்(நகரங்களிலும்) மிக எளிமையான உடை உடுத்தி மிகவும் நேர்மையாக வாழும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், தீவிரவாதிகள் எல்லாம் மெத்தப்படித்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசத்தெரிந்து நேர்த்தியான உடை அணியும் கொலைகாரர்களாக இருக்கிறார்கள்.
இதனுடைய மறு பக்கத்தை இயக்குனர் மகேந்திரன் அவர்கள்(ஆமா, இவர் தமிழ் சினிமாவில் நிறைய புரட்சி செய்திருக்கிறாரே, இவருக்கு ஒரு புரட்சி பட்டம் கூட தரலியே?!!!) பதிவு செய்திருக்கிறார்.
இவருக்கு முன்புவரை ஒரு கொடுமைக்காரன் என்பவன்(தமிழ் சினிமா வில்லன்) கடா மீசையுடன், தொப்பி வைத்து முடிந்தவரை அலங்கோலமாக சட்டை, பாண்ட் அணிந்து அனைவரையும் மிரட்டிக் கொண்டிருப்பான். ஒரு கொடுமைக்காரன் ஒரு குடும்பத்தின் தலைவனாகவும் இருக்க முடியும் என்பதை “உதிரிப்பூக்கள்” சொல்கிறது. உதிரிப்பூக்கள் நாயகன் விஜயனின் நடை, உடை, பாவனை எல்லாம் வெகு இயல்பாகவும் சாதாரணமாகவும் இருக்கும்.


சரி. இது ஒருபுறம் இருக்கட்டும். இப்பொழுதெல்லாம் கணினி நிறுவனங்களையும் சேர்த்து தானே எல்லாவற்றையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. அங்கே என்ன நிலைமை என்று விசாரித்தேன். அங்கே “Dress Code” என்று ஒன்று இருக்கிறது என்றார்கள். அப்பாடா! இங்கே நிலைமை கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கே என்று தோன்றியது. அது என்ன “Dress Code”, கோடு போட்ட ட்ரெஸ் போட்டு வரவேண்டுமா என்று என் அறியாமையை வெளிப்படுத்தினேன். அப்படி இல்லை திங்கள் முதல் வியாழன் வரை மிக நேர்த்தியான உடை அணிந்து ஷூ எல்லாம் போட்டு வரவேண்டும் என்றார்கள். சரி அப்ப வெள்ளிகிழமை என்றேன். அன்றைக்கு எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்றார்கள். நானும் விடாமல் எப்படி வேண்டுமானாலும் என்றால் எப்படிதான் வருவார்கள் என்றேன். ஆண்கள் அரைக்கால் டிரவுசருடன் கூட (பெர்முடாஸ்ன்னு சொல்லாட்டி கோவிச்சுக்க போறாங்க) வரலாம் என்றார்கள். சரி, பெண்கள் என்றேன். அவர்களும்தான் என்றார்கள். இந்த புது வகையான “Dress Code” விளக்கத்தை கேட்டவுடன் தலை சுற்றியதுடா சாமி!.


எனக்கு தெரிந்த பெண் ஒருவர் பெரிய கணினி நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். ஒரு வெள்ளிக்கிழமை அலுவலகம் சென்ற அவர் மதியமே திரும்பி வந்து மிகுந்த வருத்தத்துடன் இருந்தார். என்ன விசயம் என்றேன்? அவர் வெள்ளிக்கிழமை “Dress Code” – ல் சென்றிருக்கிறார். என்றைக்கும் இல்லாத திருநாளாக புராஜெக்ட் மானேஜர் பக்கத்தில் உட்கார சொல்லி, மேலே இருக்கும் அந்த file-ஐ எடு, இந்த சிடி-யை எடு என்று தொல்லை கொடுத்திருக்கிறார். மிகவும் நொந்து போய் வீட்டுக்கு வந்து வருந்திக்கொண்டிருந்தார். அந்த மனிதர் மிக உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு மிக நேர்த்தியான ஆடைகளை அணிந்து அலுவலகத்திற்கு காரில் வந்து செல்வாராம்.
இதுபோன்ற பாலியல் வன்முறைகள் சக மனிதர்கள் மீது எல்லா தளங்களிலும் எல்லா காலங்களிலும் நடந்தப்பட்ட வண்ணமே இருக்கின்றது. ஆசிரியர் – மாணவி, மானேஜர் – காரியதரிசி, கொத்தனார் – சித்தாள், டாக்டர்-நர்ஸ், புராஜெக்ட் மானேஜர் – டெவலப்பர், வீட்டு முதலாளி – வேலைக்காரி என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னார் ”உலகத்திலேயே மிகப்பெரிய வன்முறை நம்மை திருப்பி அடிக்க முடியாதவரை போட்டு அடிப்பதுதான்” என்று. அந்த வன்முறை தான் இங்கே நடக்கிறது.
முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் அரசு அலுவலத்தில் அரைக்கால் டிரவுசருடன் வந்ததை பார்க்க நேர்ந்தது. இதைப்பார்த்து ஊழியர்கள் ஒரு அலுவலகத்திற்கு எப்படி உடை அணிந்து வரவேண்டும் என்று கூடவா தெரியாது என்று முகம் சுழித்ததை அவர் எங்கே கவனித்தார்?
ஒரு எழுத்தாளர் முழு நீள லுங்கியுடன் பிரவுசிங் சென்டருக்கு சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டதையும், அரைக்கால் டிரவுசருடன் சென்றவர்கள் எல்லாம் அனுமதிக்கப்பட்தையும் குறித்து வார இதழ் ஒன்றில் வருந்தி இருந்தார்.


நண்பர் ஒருவரின் புதிய அலுவலத் திறப்பு விழாவிற்கு பெண் ஊழியர்கள் அனைவரும் சேலையில் வந்திருந்ததை பார்த்த அவர்களின் வெளிநாட்டு முதலாளி ஆண்களை பார்த்து நீங்கள் எல்லாம் ஏன் உங்கள் பாரம்பரிய உடையில் வரவில்லை என்று வியந்திருக்கிறார். எல்லாரும் நெளிந்துவிட்டு பிறிதொரு சமயம் வேட்டி, சட்டையில் சென்றதாக தெரிவித்தார். அதுவும் ஒரு கணினி நிறுவனம் தான்.
சரி. இருக்கட்டும். இதனால் சகலாமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,
”தொழுதகை யுள்ளும் படை யொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து”.


வெளியே இருக்கறவங்க எல்லாம் அன்னா ஹசாரே(காந்தி)யும் இல்ல, உள்ள இருக்கறவங்க எல்லாம் ராசா (கோட்ஸே)வும் இல்ல.
 

15 July, 2011

மாற்றான் தோட்டத்து மலர்..சண்டே இந்தியன் இதழ்









பொதுக்குழு பரபரப்பு
தி….க்கு மு…..க்காடும் க…..ட்சி?
திமுக இப்போது செய்யவேண்டிய முக்கிய ஐந்து சீர்திருத்தங்கள் என்ன? என்று அரசியல் சமூக விமர்சகர்கள், எழுத்தாளர்கள் சிலரிடம் கேட்டோம். சில தீவிரமான, உபயோகமான, கிண்டலான யோசனைகள் கிடைத்தன.
ஞாநி, விமர்சகர்

1 திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்குவது. அதாவது மு.க.ஸ்டாலின் நீங்கலாக மற்றவர்களை கட்சியிலிருந்து நீக்கவேண்டும்.
2 ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியில் குடும்ப ஆதிக்கத்தைத் தடுப்பது. தந்தை மாவட்டச் செயலாளர் என்றால் மகனும் பொறுப்பில் இருப்பதை தடை செய்ய வேண்டும். அவர்களை கட்சியிலிருந்து நீக்கவேண்டும்.
3 ஒரு முறையான உட்கட்சித் தேர்தலை நடத்தவேண்டும். அந்தத் தேர்தலை தேர்தல் ஆணைய அதிகாரிகளின் முன்னிலையில் நடத்தலாம்.
4 கட்சித் தொண்டர்களுக்கு ஐம்பதுகளில் நடத்தியதுபோல வாசக சாலைகள் ஏற்படுத்தவேண்டும். திராவிட இயக்கம் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களின் வரலாறு பற்றிய வகுப்புகளை நடத்தவேண்டும்.
5 கட்சியில் யார் எந்தப் பொறுப்புக்கு வந்தாலும், அவர்கள் ஓர் ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் சொத்துக்கணக்கைக் காட்டவேண்டும்.





பாமரன், விமர்சகர்

1 திராவிடர்களுக்கான சகல தேவைகளையும் கழகம் பூர்த்தி செய்துவிட்டபடியால் திமுக என்கிற அதன் பெயரை சோமுக என்று மாற்றம் செய்யவேண்டும். (அதாகப்பட்டது சோனியா முன்னேற்றக் கழகம்)
2 பேரன் பேத்தி, மாமன் மச்சான், கொழுந்தனார் நாத்தனார் தவிர வேறுயாரும் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிக்குப் போட்டியிடக்கூடாது.
3 சினிமா எடுப்பது, பத்திரிகை நடத்துவது, டிவி காட்டுவது தொடங்கி, ஆணுறைக்கான கம்பெனி வரைக்கும் குடும்ப உறுப்பினர்களே நிர்வாக இயக்குனர்களாக இருந்து தமிழ்ப்பண்பாட்டை மானாட மயிலாட பாணியில் காப்பாற்ற வேண்டும்.
4 உண்மை அறியும் சோதனைக் கருவியை பொதுக்குழு வாசலில் பொருத்தி மாநில சுயாட்சி, ஈழ விடுதலை, மீனவர் பிரச்னை, மொழிப் பிரச்னை, இடஒதுக்கீடு பிரச்னை என ‘கண்றாவி’ பிரச்னைகள் குறித்தெல்லாம் இன்னமும் யாரேனும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களா என்பதைக் கண்டறிந்து அவர்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவேண்டும்.
5 மேற்கண்ட நான்கு தீர்மானத்தையும் எதிர்ப்பவர் எவராக இருந்தாலும் அவர்கள் இனத்துரோகிகள், குடிகெடுக்க வந்த கோடாரிக்காம்புகள் எனத் தீர்மானம் நிறைவேற்றி தமிழகத்தை விட்டு பார்வதியம்மாள் பாணியில் நாடுகடத்தப்பட வேண்டும்.




நாஞ்சில் நாடன், எழுத்தாளர்

1 திராவிட இயக்கத்தின் அடிப் படைக் கோட்பாடுகளை மீண்டும் கடைப்பிடிக்க முயலவேண்டும். திமுக என்ற இயக்கத்திற்காக ரத்தமும், வியர்வையும் சிந்தியவர்களின் தியாகத்தை பரிசீலனை செய்யவேண்டும்.
2 ஒரு கார்ப்பரேட் நிறுவனமாகத் தோற்றமளிக்கும் திமுகவை மறுபடியும் மக்கள் நலன் சார்ந்த இயக்கமாக உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
3 எல்லா அரசியல் தலைவர்
களுக்கும் குடும்பங்கள் உள்ளன. ஆனால் குடும்ப நலன்களை மட்டுமே முன்னிறுத்தாமல் தமிழ்நாடும், தமிழ் மக்களும்தான் தமது குடும்பம் என்பதை திமுகவின் கட்சித்தலைமை உணரவேண்டும்.
4 ஈழம் சார்ந்த திமுகவின் அணுகுமுறையை முற்றிலும் மாற்றிக்கொள்ள வேண்டும்
5 வெறுமனே மேடைப்பேச்சு, கோஷங்கள் ஆகியவற்றைவிட்டு தமிழ் மொழி, பண்பாட்டுத் துறையில் உண்மையான வளர்ச்சிக் கொள்கைகளை மேற்கொள்ள வேண்டும்.




இமையம், எழுத்தாளர்


1 திமுக படிப்படியாக தன்னுடைய அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகிவந்திருக்கிறது. அக்கட்சி மீண்டும் தன்னுடைய வேர்களை மீட்டெடுக்க வேண்டும்.
2 மாவட்டச் செயலாளர்கள் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயமாக மாற்றப்பட வேண்டும்.
3 அமைச்சர்களாக இருப்பவர்கள் கட்சியில் முக்கிய பதவியோ, மாவட்டச் செயலாளர் பதவியோ வகிக்கக்கூடாது.
4 மாவட்டச் செயலாளர்களின் மகன்கள், மனைவிகளின் புகைப்படம் போட்டு சுவரொட்டிகள் ஒட்டுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
5 யார் வேண்டுமானாலும் எந்தப் பதவிக்கு வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழ்நிலை திமுகவில் உருவாகவேண்டும்.





கலாப்ரியா, கவிஞர்
1 எங்கள் பதின் பருவத்தில், எங்களைப் போன்றவர்களை, திராவிட இயக்கம் ஈர்த்தது போன்ற சூழலை, இன்றைய இளைஞர்கள் மத்தியில் உருவாக்க வேண்டும்.அவர்கள் இன்று அடைந்துள்ள பல சமூக நீதிகளுக்கு தி.மு.க முக்கிய காரணம் என்று அவர்கள் உணராதிருக்கிறார்கள். அதற்கு தொண்டனை வைத்துதான் கட்சி என்ற ஆதி மனோபாவம் பலப்பட வேண்டும்.
2 மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கோஷம் ஒரு நிகழ்வாய் உருப்பெறத் தொடங்கி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகப்போகிறது. உண்மையான ஒரு ஃபெடரல் அமைப்பை உருவாக்கத் தவறியதாகவே உணர்கிறேன். அதற்கு இப்போதும் வாய்ப்பு உள்ளது .
3 ஊடகங்கள் சித்தரிக்கிற, பொதுப்புத்தி சார்ந்த ‘குடும்ப அரசியல்’ குறித்த எதிர்மறைக் கருத்துகள் பற்றி உள்ளபடியே ஆராயவேண்டும்
4 ஈழப்பிரச்சினையில் மத்திய அரசின் (அது காங்கிரஸ் ஆனாலும் சரி வேறு எந்த ‘தேசியக் கட்சி ஆனாலும் சரி) அணுகுமுறைகள் முற்றிலும் தவறானது என்று மத்திய அரசுடன் எந்த சமரசமும் இன்றி உணர்த்தவேண்டும்.
5 ‘வீழ்வது நாமாக இருந்தாலும்.வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற கோஷத்தை அதே அக்கறையுடன் இனி யார் காப்பாற்றப்போகிறார்கள், என்ற கவலை பரவலாக உள்ளது. இதற்காக அறிவார்ந்த தளத்தில் அடுத்த தலைமுறைத் தலைவர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளத் தயாராக வேண்டும்.


நன்றி : சண்டே இந்தியன் இதழ் (ஜூலை 12, 2011)

06 July, 2011

மானங்கெட்ட சிவத்தம்பி மரணமாம்!!! கலைஞர் கூப்பிட்டதினால்சிவத்தம்பி போகலாம். நான் போக மாட்டேன்.”





மானங்கெட்ட சிவத்தம்பி மரணமாம்!!! கலைஞர்கூப்பிட்டதினால்சிவத்தம்பி போகலாம். நான் போக மாட்டேன்.”
 
 
”ஈழத்தில் இனப்படுகொலை தீவிரமாக நடைபெற்ற வேளையில் என்னைப் போன்றவர்கள் தூக்க மாத்திரை போட்டுக்கொண்டுதான் தூங்கினோம். எத்தனை நாளைக்குத்தான் சாவை கேட்டுக் கொண்டே இருப்பது. நாளைக்கு சாகப் போகிறார்கள் மனிதர்கள் என்று தெரிந்தால் எப்படித் தூக்கம் வரும்?


இந்தப் படுகொலையை நேரடியாக ஆதரித்தவர்கள், மறைமுகமாக ஆதரித்தவர்கள் மீதான ஆத்திரம் எனது உயிர் மூச்சு உள்ளவரை நீடித்திருக்கும்.



தூக்கமில்லாமல் கழிந்த இரவுகள் திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகின்றன. அதனாலே செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை. கலைஞர் கூப்பிட்டதினால் சிவத்தம்பி போகலாம். நான் போக மாட்டேன்.”





( பேராசிரியர் ”தொ.ப” என்றழைக்கப்படும் தொ.பரமசிவன் “சண்டே இந்தியன்” இதழுக்கு அளித்த பேட்டி.)



என்றான் தந்தையர் நாடுடை தமிழன் , ஆனால் நீயோ, உலக தமிழ் இன துரோகி கருணாநிதியின் செம் (மறி)மொழி மாநாட்டு மேடை ஏறி தமிழ் இன படுகொலையை சரிதான் என்று ஏற்றுக்கொண்ட கூறுகெட்ட தமிழா உன் பிணத்தோடு நீ கொடுத்த நூல்களும் மற்றும் அத்தனையும் சாம்பலாகட்டும்.


ராவணன்